ஒரு வருடம் வேலிடிட்டி... அசத்தும் ப்ரீபெய்டு திட்டங்கள்!!

ஒரு வருடம் வேலிடிட்டி... அசத்தும் ப்ரீபெய்டு திட்டங்கள்!!

மாதாமாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதுதான் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான பெரும் தலைவலி. 28 நாட்களுக்கொருமுறை ரீசார்ஜ் செய்யச்சொன்னால் யாருக்கு ஞாபகமிருக்கும்?

குறைந்தபட்சம் 2 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட எந்தவொரு டேட்டா பிளானும் 700 ரூபாய்க்கு குறைவாகக் கிடைப்பதில்லை. ஏர்டெல், வோடபோன், ஜியோ அனைத்து நிறுவனங்களும் 700 ரூபாய்க்கு அதிகமாகத்தான் ப்ரீபெய்டு பிளான் தருகிறார்கள்.

குறைவான டேட்டா, நீண்ட கால வேலிடிட்டியுடன் கூடிய திட்டங்களுக்கு மவுசு வந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான், புத்தாண்டு நாளில் பி.எஸ்.என்.எல் தன்னுடைய வழக்கமான ப்ரீபெய்டு திட்டங்களை தடாலடியாக மாற்றியமைத்திருக்கிறது, ‘

பி.எஸ்.என்.எல் இணைப்பை பயன்படுத்துபவர்களில் பலர் டேட்டாவை விட அன்லிமிடெட் கால் வசதியை விரும்புகிறார்கள். இரண்டு இணைப்பு வைத்திருப்பவர்களில் நிறைய பேர் இரண்டாவது இணைப்பாக பி.எஸ்.என்.எல். வைத்திருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து, பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

2023 புத்தாண்டு ஸ்பெஷல் திட்டமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் 397 ரூபாய் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது. 400 ரூபாய்க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்களே அரிதாகிவிட்ட நிலையில் நீண்ட கால வேலிடிட்டியுடன் கூடிய ப்ரீபெய்டு பிளான் கொண்டு வந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.

வேலிடிட்டிதான், முக்கியமான ஹைலைட். 180 நாட்கள் வரை நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. அன்லிமிடடெட் கால் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிகவேக டேட்டா கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது இதுவொரு சிறப்பான திட்டமாக இருக்கும். 2 ஜிபி டேட்டா தீர்ந்து போனாலும், இணையம் செயல்படும். இணையத்தின் வேகம் மட்டுமே குறைவாக இருக்கும்.

பி.எஸ்.என்.எல் புத்தாண்டு பிளானுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து எர்டெல், ஜியோ போன்றவையும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ஒரு வருடம் வரை வேலிடிட்டி தரக்கூடிய திட்டங்களை இரு நிறுவனங்களும் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளன. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய நேர்வது வாடிக்கையாளர்களை சிரமப்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, நீண்டகால வேலிடிட்டியுடன் கூடிய நிறைய திட்டங்கள் இன்னும் நிறைய வரக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com