பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இவ்வாறு அரிசி, தக்காளி முதல் மளிகை பொருட்கள் வரை அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மேலும் பண்டிகை காலம் நெருங்க இருப்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளும் அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெங்காயத்தினுடைய விலை வரும் நாட்களில் உயரும் என்று கூறப்படுவதால், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும், கொள்முதலை அதிகப்படுத்தவும் அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒன்றிய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் வெங்காயத்தினுடைய விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உடனடியாக கூடுதல் கொள்முதலை முன்னெடுக்கவும், கையிருப்பை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நாட்டில் முதல்முறையாக வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி குறையும், உள்நாட்டு கையிருப்பு கூடுதல் அடைய வாய்ப்பு ஏற்படும்.இது மட்டுமல்லாது நாட்டில் 3 லட்சம் டன் வெங்காய கையிருப்பை இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெங்காய கையிருப்பை 5 லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கூடுதல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய வேளாண் சந்தைகளின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்த மேற்கொள்ளப்பட்டு தள ஒரு லட்சம் டன் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது நுகர்வை பொறுத்து விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சராசரியை விட கூடுதலாக விற்பனை செய்யப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அது இதுவரை வெங்காயம் 1400 டன் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.