பகுதிநேர வேலை தருவதாக கூறி ஆன்லைனில் மோசடி. பணத்தை இழந்த ஆத்தூர் பொறியியல் பட்டதாரி!

பகுதிநேர வேலை தருவதாக கூறி ஆன்லைனில் மோசடி. பணத்தை இழந்த ஆத்தூர் பொறியியல் பட்டதாரி!
Published on

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பகுதி நேர வேலை தருவதாக சொல்லி பொறியியல்  படித்த பட்டதாரியிடம் ஆன்லைன் மூலம் ரூபாய் 2.46 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விசாரித்து வருகின்றனர். ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  வேலை தேடி வரும் பொறியியல் பட்டதாரியான இவரது அலைபேசிக்கு டெலிகிராம் ஐடியில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பகுதிநேர வேலையாக யூடியூப் வீடியோக்களை லைக் செய்து ஷேர் செய்தால் ஊதியம் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பிய கண்ணன் அவர்கள் குறிப்பிட்ட லிங்கில் சென்று அதில் வந்த  வீடியோக்களை லைக் செய்து ஷேர் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கிற்க்கு ரூபாய் 150 பணம் வந்துள்ளது. பணம் வந்ததும் அவர்கள் சொன்னது உண்மைதான் எனத் தொடர்ந்து அவர் அந்த வேலையை செய்தபோது மேலும் 300 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து யாரோ ஒரு மர்மநபர்  கண்ணனைத் தொடர்பு கொண்டு இணைய தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை  கூறியுள்ளார். அதனை நம்பிய கண்ணனும் அந்த மர்ம நபர்  தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்குரூபாய் 2 லட்சத்து 56 ஆயிரத்து 600  அனுப்பி உள்ளார்.

பணப்பரிவர்த்தனை நடந்த நிலையில் அந்த முதலீட்டு தொகைக்காக கண்ணனின் கணக்கில் ரூபாய் 10,250  திரும்ப வந்துள்ளது. அதன்பின் அந்த நபரிடம் இருந்து எந்த வித அழைப்போ குறுஞ்செய்தி வழித்  தொடர்பும் இல்லாமல் போய் உள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையில்  அலுவலக போலீசார் விசாரணை நடத்தி ஆன்லைனில் ரூபாய் இரண்டு புள்ளி 46 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையில் மோசடியில் இழந்த பணம் வடநாட்டின் நகரான பஞ்சாபில் உள்ள வங்கி கணக்குகளுக்கு சென்று இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பற்றி சைபர் கிரைம் காவல் துறையினர்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையில் இரண்டரை லட்சம் வைத்திருக்கும் ஒரு படித்த இளைஞர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டு எத்தனையோ சிறு  தொழில்கள் செய்ய இங்கே வாய்ப்புகள் உண்டு. ஆனால் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் இப்படி ஆன்லைன் வழியே நம்பிக்கையற்ற நபர்களிடம் பணத்தை இழப்பது சரியானதன்று.  இதையெல்லம் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com