மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா! தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்!

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா! தமிழ்நாடு சட்டமன்றத்தில்  ஏகமனதாக நிறைவேற்றம்!
Published on

தமிழகத்தில் இன்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்ததை அடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப் பட்டது.

முன்னதாக ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்ட முன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப் பட்டது.

online rummy
online rummy

இதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.” என தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் , மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா , காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை, அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் , ஓ. பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், பாமக வின் ஜி.கே.மணி மற்றும் பாஜக வின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததை யடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா நிறைவேறியதாக சபநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com