திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் அங்க பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 11:00 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களது வசதிக்காக அவ்வப்போது தனது சேவைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவது வாடிக்கை.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். அதற்கான டோக்கன்கள் திருமலையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

எனவே இனிமேல் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் வசதிக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் திருப்பதி தேவஸ்தானம் அமைப்பினரால் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் அங்க பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தவிர இம்மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் கூறி உள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள்  www.tirupatibalaji.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com