
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் ஆன்லைன் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என்ற வாதத்தை முன் வைத்தார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் ரகுபதி கூறியது, முந்தைய அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்தும் மேலும் புதிய சட்டம் இயற்ற மாநில அரசை வலியுறுத்தியும் தீர்ப்பு வழங்கியது. இதைக் கருத்தில் கொண்டு திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆன்லைன் தடை சட்டம் கொண்டுவர மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும், ஒன்றிய அரசு ஆன்லைன் தடைத் தொடர்பாக சட்டம் இயற்றி உள்ளது என்று கூறி இருக்கிறார்.
ஆனால் ஒன்றிய அரசு ஐடி ஆக்டில் சில விதிகளை மட்டுமே கொண்டு வந்திருக்கிறது. அந்த விதிகளும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், அதனை நடத்துபவர்களுக்கு பாதுகாப்பாகவும் மேலும் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் உள்ளது. மேலும் 42 பேர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்க்கிறோம், சூதாட்டம் கண்டிக்கதகுந்தது.
தொடர்ந்து பேசிய அவர், வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மாநில அரசுக்கு உள்ள உரிமையை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டங்கள் ஒவ்வொன்றும் பொது பட்டியல், மாநில பட்டியல், ஒன்றிய பட்டியல் என்று தனித்தனியாக உள்ளது. இதில் மாநில பட்டியலில் உள்ளவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
நேரடியாக சூதாட்டம் விளையாடுவதற்கும் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. ஆன்லைனில் விளையாடும் போது 3வது நபர் ஆன்லைன் ப்ரோக்ராமும் விளையாட்டில் பங்கேற்கும். இந்த 3வது நபர் எது வேண்டுமானாலும் செய்ய முடியும். அதனால் பலர் பணங்களை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு குழுவை அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு, விளையாடுபவர்களிடம் கருத்தை கேட்டு, 42 பேர் பலியானது சுட்டிக்காட்டி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது என்று கூறினர்.