சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது ஆன் லைன் ரம்மி குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்
குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை எல்லாம் ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள் என சமக தலைவர் சரத்குமார் பேசியுள்ளார்.
என் கிரெடிட் கார்டில் ரூ. 10 லட்சம் லிமிட் உள்ளது. எனவே அதற்கு மேல் உள்ள தொகைக்கு என்னால் விளையாட முடியாது. அதுபோலதான் அனைவருக்கும்” என தெரிவித்தார்.
ஆன்லைனில் ரம்மி மட்டுமல்ல ஆன்லைனில் பல விசயம் இருக்கிறது. நான் மட்டுமா நடிக்கிறேன். தோனி, ஷாருக்கான் கூட நடிக்கிறார்கள்” என கூறினார். உண்மையில் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. அதற்கு திறமை அவசியம்" என்றும் கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் வகுப்பது அரசின் வேலை. அமைச்சர் ரகுபதியிடம் அவசர சட்டம் கொண்டுவர வேண்டுமென நான் வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
"நான் விளம்பரத்தில் நடித்தபோது ஆன்லைன் ரம்மிக்கு தடைச் சட்டம் இல்லை. அதற்கு பிறகு தான் அவசர சட்டம் பிறப்பித்தார்கள். ஒருவேளை அவசரச் சட்டம் அதற்கு முன்பாக பிறப்பித்து இருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
அரசு முடிவெடுத்து இது தடைசெய்யப்பட்ட ஒண்ணுன்னு சொன்னா, தடைசெய்யப்பட்டதை எப்படி நான் பயன்படுத்துவேன். தடை செஞ்ச ஒண்ணை நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்குறாருன்னு எப்படிச் சொல்வீங்க?”
ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்யுறதுக்கு அரசு என்ன முடிவெடுக்குதுன்னு முதல்ல கேளுங்க. சரத்குமார் நடிக்கிறதை ரெண்டாவதா கேளுங்க என கட்டமாக தெரிவித்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.