”நாங்க ரொம்ப ஏழை” அமெரிக்கா கோடீஸ்வரர்களின் புலம்பல்!

Money
Money

மெரிக்காவில் கோடீஸ்வரர்கள் பலர் இருந்தும் அவர்கள் தங்களை கோடீஸ்வரர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்றும் செல்வந்தர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே தங்களை கோடீஸ்வரர்கள் என்று கூறிக்கொள்வதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஒரு நிதிநிறுவனம் நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 3,000-த்துக்கும் மேலான கோடீஸ்வரர்கள் இருந்த போதிலும் அதில் 8 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது 240 பேர் மட்டுமே தங்களை கோடீஸ்ரர்கள் என்று கூறிக்கொண்டனராம்.

அதிக வருமானம் ஈட்டும் பலர் தாங்கள் சேர்த்த பணத்தை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தி வருவது தெரியவந்தது. ஒரு மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேலும் சொத்துக்களில் முதலீடு செய்தவர்களில் 60 சதவீதம் பேர் தங்களை உயர் வகுப்பினர் என கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் தங்களை இன்னும் நடுத்தர வகுப்பினராகவே கருதுகின்றனர்.

மாநிலத்துக்கு மாநிலம் ஒருவரின் வருமானம் மாறுபட்ட போதிலும் அதிக வரி செலுத்துபவர்களில் 1 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் 6,52,657 டாலர்களாகும். இதனை கனக்கிட்டால் ஒருவரின் சராசரி ஆண்டு வருமானம் 9,52,902 டாலர்களாகும்.  

அமெரிக்கர்கள்  நிதி சார்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் சராசரியாக 2,33,000  சம்பாதிக்க வேண்டும். ஆனால், பணக்காரர்களாக இருக்க வேண்டுமானால்  சராசரியாக ஆண்டு 4,83,000 டாலர் சம்பாதிக்க வேண்டும்.

ஆனாலும் விலைவாசி உயர்வு, அதிக செலவுகள் காரணமாக அவர்களால் அதிகம் சேமிக்க முடிவதில்லை. வீட்டுச் செலவுகள், குழந்தைகள் பராமரிப்புச் செலவுகள், கார் போன்ற வாகனக் கடன்ங்கள், அடமான கடன்கள், வாடகைகள், படிப்புச் செலவு கடன்கள் உள்ளிட்டவைகளையும் அவர்கள் சமாளிக்க வேண்டும். இதன்காரணமாக கோடீஸ்வரர்களாக உள்ள பலர் அமெரிக்கர்கள் தங்களை ஏழை என்றே கூறிக்கொள்கிறார்களாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com