விஜய் அரசியலுக்கு வருவாரானு கடவுளுக்குதான் தெரியும்; ஷோபா சந்திரசேகர்!

ஷோபா சந்திரசேகர்
ஷோபா சந்திரசேகர்

என் மகன் விஜய் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அந்த கடவுளுக்குதான் தெரியும் என நடிகர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு என்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேசியதாவது;

விஜய் நடித்து வெளிவர இருக்கின்ற வாரிசு திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக இன்று காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தேன். 

நீங்களும் எல்லாரும் அந்த படம் வெற்றியடைய வேன்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.. அதுதவிர உலகில் சமாதானமும் சந்தோஷமும் நிலைத்து மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி இருக்கணும் என்று காமாட்சி அம்மனை  வேண்டி கொண்டேன். இன்று நிதானமாக ஆர அமர காமாட்சியம்மன் அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தது சந்தோஷமாக இருக்கிறது என்றார்..

ஷோபா சந்திரசேகர்
ஷோபா சந்திரசேகர்

மேலும் செய்தியாளர்கள் வாரிசு படத்தில் விஜயின் கேரக்டர் பற்றிக் கேட்டதற்கு, வாரிசு படத்தில் அவர் பேமிலி சென்டிமென்ட் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறினார் .

பின்னர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேள்வி எழுப்ப, ‘’அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. விஜய் அரசியலுக்கு வருவாரானு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்’’ என்றார் ஷோபா சந்திரசேகர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com