ஊட்டி: தேனீக்கள் விரட்டியதால் சுற்றுலாவாசிகள் சிதறி ஓட்டம்... ஒருவரைக் காணாததால் தேடும் பணி தீவிரம்!

Nilgiri
Nilgiri

ஊட்டி செங்குட்ராயன் மலையைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாவாசிகளை நோக்கி ஏராளமானத் தேனீக்கள் விரைந்ததால் அவர்கள் சிதறி ஓடினார்கள். அதில் ஒருவரை மட்டும் இன்னும் காணாததால் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், சேலாஸ் பகுதிகளுக்கு 10 கிமீ தொலைவில் கோட்டக்கல் உள்ளது. அங்கிருந்து ஒரு 2கிமீ தொலைவில்தான் இந்த செங்குட்ராயன் மலை உள்ளது. இந்த மலைக்கு பாறைகள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில்தான் செல்ல வேண்டும். இது மிக அழகான மலை என்றாலும் மிகவும் ஆபத்துமிக்க மலையும் கூட.

இந்த இடத்திற்கு அவ்வளவாகப் சுற்றுலாவாசிகள் யாரும் வர மாட்டார்கள். அந்தவகையில் நேற்று தர்மபுரி மற்றும் சென்னையைச் சேர்ந்த 7 பேர் ஒரு குழுவாக இந்த மலையைச் சுற்றுப் பார்க்க வந்துள்ளனர். மலைக்கு மேல் ஏறிப் பள்ளத்தாக்குகளைப் பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென்று தேனீக்கள் கூட்டம் கூட்டமாக பறந்துள்ளன.

அதைக்கண்டு பயந்துப்போன 7 பேரும் திசைகள் தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார்கள். தேனீக்கள் அனைத்தும் பறந்து வெகுதூரம் சென்றப் பின் அனைவரும் ஒரு இடத்தில் கூடியிருக்கிறார்கள். அதில் 7 பேரில் 6 பேர் திரும்பியுள்ளதுத் தெரியவந்துள்ளது.

ஒருவரைக் காணவில்லையென்பதால் சிறிது நேரம் சகப் சுற்றுலாவாசிகளே சுற்றியுள்ள இடங்களில் தேட ஆரம்பித்தனர். ஆனால் வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த இடத்திற்கு விரைந்த மீட்பு குழுத் தேடுதல் பணியை ஆரம்பித்திருக்கின்றது. அது ஒரு அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் சீக்கிரம் இருள் கவ்வியதாலும் இரவு வரை அவர்களால் தேட முடியவில்லை. ஆகையால் இன்று காலை மீண்டும் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகை… Red Zone ஆன இடங்கள்!
Nilgiri

இதுத்தொடர்பாகச் சம்பவ இடத்தில் இருந்த போலீஸார், “இந்த வனப்பகுதியைப் பற்றி உள்ளூர் மக்களுக்கே அவ்வளவாகத் தெரியாது. இந்த மலையைப் பற்றி யூட்யூபர்கள் சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் போட்டிருக்கிறார்கள். அதனைப் பார்த்துதான் இந்த இடத்திற்குச் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

நேற்று பகலில் தர்மபுரி மற்றும் சென்னையை சேர்ந்த 7 பேர் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒரு இளைஞர்தான் காணவில்லை. இந்த இடத்தில் ஆபத்தானப் பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளதால் தேனீக்குப் பயந்து ஓடும்போதுப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்துப் பாறை இடுக்கில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.“ என அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com