சிபிஐ சோதனை
சிபிஐ சோதனை

ஆபரேஷன் சக்ரா; நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை!

Published on

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்தி நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டறிய ‘ஆபரேஷன் சக்ரா’ என்ற அதிரடி சோதனையை நாடு முழுவதும் சிபிஐ நடத்தி வருகின்றது .

 -இதுகுறித்து சிபிஐ தரப்பில் தெரிவித்ததாவது:

 நாட்டில் ஆன்லைன் நிதி மோசடி உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிய நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

அதில் இதுவரை சைபர் கிரைம் குற்றவாளிகள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேரை கர்நாடக போலீசும், 7 பேரை டெல்லி போலீசும், 2 பேரை பஞ்சாப் போலீசும்,ஒருவரை அந்தமான் போலீசும் கைது செய்துள்ளனர்.

 -இவ்வாறு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com