ஆபரேஷன் காவிரி - இதுவரை 3000 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்பு - மத்திய அரசு அதிரடி!

ஆபரேஷன் காவிரி - இதுவரை 3000 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்பு - மத்திய அரசு அதிரடி!
Published on

சூடானில் தொடரும் உள்நாட்டுப்போரின் காரணமாக உலக நாடுகள் தங்களுடைய குடிமக்களை திரும்ப அழைத்துக்கொள்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக தொடரும் கலகத்தின் காரணமாக இதுவரை 3000 பேர் இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் நேற்று 300 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ஓரு மாதமாக தொடரும் அவசரநிலை காரணமாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். சூடான் தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல நகரங்களில் கடுமையான சண்டை நடக்கிறது.

'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் மத்திய அரசு சென்ற மாதம் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியது. இதன் காரணமாக இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில். மீட்கப்பட்ட மூவாயிரம் பேரில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூடானில் உள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் பணியில் இருக்கிறோம் என்று தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதாற்காக போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. இதனால் உலக நாடுகள் அவசர அவசரமாக தங்களுடைய நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.

ஆபரேஷன் காவிரி திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை மீட்பு பணிக்காக சூடானுக்கு சென்று அங்குள்ள இந்தியர்களை அழைத்து வந்தன.

மீட்பு பணிகளில் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தலைநகர் கார்தூமிலிருந்து சூடான் துறைமுகம் வரையிலான 850 கி.மீ தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாதையை கண்டுபிடித்து அதில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் 2 விமானப்படை விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன. இந்த 850 கி.மீ. தூரத்தை கடப்பதற்கான பயண நேரம் 12 முதல் 18 மணிநேரம் வரை இருந்து வருகிறது.

கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் இரவு பகலாக செயல்பட்டு இந்தியர்களை மீட்டு, சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சூடான் துறைமுகத்தில் இந்தியர்களுக்கு போதுமான ஆவணங்கள் கிடைப்பதிலும் இந்திய தூதரகம் முக்கிய பங்காற்றி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த வாரம் நிறைவடையும் நிலையில் மீட்பு பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com