#BIG NEWS : 73 எம்பிக்கள் போர்க்கொடி! தலைமை தேர்தல் ஆணையரை நீக்க நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்..!

Chief Election Commissioner Gyanesh Kumar.
Chief Election Commissioner Gyanesh Kumar.source:pragativadi.com
Updated on

ஞானேஷ் குமார் ஐஏஎஸ் இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக தற்போது பணியில் உள்ளார். .இவர் 2025 பிப்ரவரி மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவியில் செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் மத்திய அரசு செயலராகவும் உள்துறை / பாராளுமன்ற விவகாரங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்ட திறமையான ஐஏஎஸ் அதிகாரியான இவர் கேரளா கேடர் அதிகாரி என்றும் அறியப்படுகிறார். எனினும் இவர் மீது அவ்வப்போது சில சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் எடுத்த அதிரடி முடிவுகளால் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்தத் தேர்தலில் ஞானேஷ் குமார் எடுத்த நடவடிக்கைகள் பல. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான கடுமையான நடத்தை விதிமுறை.மத்திய பார்வையாளர்கள் நியமனம், பாதுகாப்பு பலப்படுத்துதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு,

வாக்காளர் பட்டியல் திருத்தம், அதிக வாக்குப்பதிவுக்கான முன்னெடுப்பு, வாக்காளர் வேட்பாளர்களிடையே பணம் மற்றும் பரிசுகள் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு. எனினும் இவற்றுடன் சில முக்கிய அதிகாரிகளின் மாற்றங்கள் ஆளும் கட்சியின் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு , வங்கதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் தேர்தல் நிறைவுற்ற நிலையில் தற்போது பல எதிர்க்கட்சிகள் இணைந்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மேற்கு வங்க தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலையில்லை.. திரிமுணால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், குற்றம்சாட்டின. இது அரசியல் விவாதமாகவும் மாறியது.

தற்போது மாநிலங்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்து 73 எம்பிக்கள் இந்த நோட்டீசை வழங்கியுள்ளனர் . அவருக்கு எதிராக ஆதாரங்களுடன் கூடிய ஒன்பது குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் ஏற்கனவே முன்மொழிந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஞானேஷ் குமார் நீடிப்பது அரசியலமைப்பின் மீதான நேரடி தாக்குதல் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கான விளைவுகள் என்ன என்பது விரைவில் தெரியவரும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

இதையும் படியுங்கள்:
85% வாக்குப்பதிவு தமிழக வரலாற்றில் ஒரு சிகரம்! - வாக்களித்த மக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி - விஜய்..!
Chief Election Commissioner Gyanesh Kumar.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com