இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை...மத்திய அரசு மீது மணீஷ் திவாரி புகார்!

மணீஷ் திவாரி
மணீஷ் திவாரி

ளவு பார்த்த்தாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீர்ர்கள் 8 பேரை விடுவிக்க இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அஸ்ஸாதுத்தீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகள் நம்மை அதிகம் நேசிக்கிறார்கள் என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் 8 பேரையும் விடுவித்து இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஸ்ஸாதுஸ்த்தீன் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், இந்த  விவகாரத்தில் சிக்கியிருந்த 8 பேரின் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு மற்றும் எம்.பி.க்கள் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததே நிலை விபரீதமானதற்கு காரணம் என்றும் அவர்  தெரிவித்தார். இந்த விஷயத்தை மறைப்பதில் என்ன இருக்கிறது என்று அவர் கேட்டார்.

கத்தார் நீதிமன்றம் முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளதை அடுத்து நிலைமை கைமீறி போய்விட்டதாக அவர் மேலும் கூறினார். எதற்காக 8 கடற்படை அதிகாரிகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் என்ன என்பதுகூட அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏன் அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள்கூட இதுபற்றி குடும்பத்தினருக்கு சரிவர தெரிவிக்கவில்லை என்று மணீஷ் திவாரி மேலும் கூறினார்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை கேள்விப்ப்ட்டதும் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளது. இந்திய அரசு தனது ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அரசியல் செல்வாக்கு மூலமும் அதிகாரிகள் மேல்முறையீடு செய்ய வழிவகுக்க வேண்டும். முடிந்தால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய கடற்படையில் உயர் பதவியில் பணியாற்றிய ஓய்வுபெற்ற 7 அதிகாரிகள் மற்றும் ஒரு மாலுமி, கத்தாரில் உள்ள “அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்டு கன்ஸன்டன்சி சர்வீசஸ்” என்னும் ஓமன் விமானப் படையுடன் தொடர்புடைய தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கத்தார் ஆயுதப் படையினருக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவர்களது ஜாமீன் மனுக்களும் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசு தலையிடும் வரை அவர்கள் குடும்பத்தினரை சந்திக்க்கூட அனுமதி மறுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com