பாட்னாவில் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

பாட்னாவில் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!
Published on

மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மராட்டிய முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதலமைச்சரும் , சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Modi- Amithsha
Modi- Amithsha

எதிர்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாக திரட்டி, பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அதிரடி முயற்சி நடக்கிறது. குறிப்பாக இமாசல பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணம் உருவாகி, மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்குவதற்கு பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய லோக்தள் உள்ளிட்ட கட்சிகள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானா மாநில முதலமைச்சரும், ‘பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகரராவ் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com