நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் செங்கோல் நிறுவுவதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை எனக் கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் குறித்து சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறுவப்படவுள்ள செங்கோல் குறித்து விளக்கமளித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து ஆளுமை மாற்றத்தின்போது செங்கோல் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார். அந்த செங்கோல் தயாரித்த இருவரும் உயிருடன் உள்ளதாகவும், உம்மிடி பங்காருகளை பிரதமர் கவுரவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

செங்கோலை நிறுவும் நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள 20 ஆதினங்கள் பங்கேற்க உள்ளதாக கூறிய அவர், சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட உள்ளதாகவும் குறபிப்பிட்டார். மேலும் செங்கோல் நிறுவுவதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை எனக்கூறிய அவர், நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜனநாயகத்தின் கோயிலுக்கு கொடுக்கும் மரியாதையை புறக்கணிப்பது நல்லதற்கு அல்ல என தெரிவித்த அவர், குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதையை பிரதமர் வழங்கியுள்ளதாக கூறினார்.

மேலும், சத்தீஸ்கரின் சட்டப் பேரவையை சோனியா காந்தி திறந்து வைத்தார் என்றும், ஆளுநர் திறந்து வைக்கவில்லை என சுட்டிக் காட்டிய அவர், நாட்டிற்கு குடியரசுத் தலைவர் போல, மாநிலத்திற்கு ஆளுநர் தான் முக்கியம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் மற்றும் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com