அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கு இன்று தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ்.  தாக்கல் செய்த வழக்கு இன்று தீர்ப்பு!
Published on

அதிமுக தேர்தல் மற்றும் பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது

தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது என்றும் வாதிடப்பட்டது.

தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. பொது செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும் குற்றம்சாட்டபட்டது.

ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளில் தீர்ப்பை இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு வழங்க உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com