சொத்து விபரங்களை தாக்கல் செய்யுங்கள்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் பணியிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தர விட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் பணியாற்றும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை  தாக்கல் செய்ய வேண்டும்.  

தமிழக ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளின் அடுத்த பதவி நிலை உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக, முந்தைய ஆண்டுக்கான ஆசையா சொத்து விவரங்களை வருகின்ற ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்க தவறினால் அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com