2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலை வழங்கினார்.

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் கோவில்களில் ஒருகாலம் கூட பூஜை நடத்தமுடியாமல் நிதி வசதி மிக குறைவாக இருந்தது. அதனை சரி செய்யும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை ஒருகால பூஜை திட்டத்தினை செயல்படுத்தப்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கோவிலின் பெயரிலும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் செய்யப்பட்டு வந்தன.

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.130 கோடியிலான நிதி ஏற்படுத்தித்தரப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் "ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதி வசதி இல்லாமல் இருந்த 15,000 திருக்கோயில்கள் இப்போது பயன்பெற்று வருகின்றன. இத்திட்டம், கூடுதலாக 2,000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு வசதி செய்துத்தரப்படும்.

இதற்கான அரசு மானியமாக ரூ.30 கோடியும் பொதுநல நிதியாக ரூ.10 கோடியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்க்கப்படும் 2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படும்" என்று அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை அடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , 2000 திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணனிடம் வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com