ஜாய் லேண்ட்
ஜாய் லேண்ட்

ஆஸ்கார் பரிந்துரை பாகிஸ்தான் படத்துக்கு பாகிஸ்தானில் தடை!

பாகிஸ்தானில் சயின் சாதிக் என்ற இயக்குனரின் முதல் படமான ‘ஜாய் லேண்ட்’ என்ற திரைப்படம் அந்நாட்டின் சார்பாக 2023-கான ஆஸ்கார் விருதுப் பரிந்துரைக்காக அனுப்பப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் கதை - பாகிஸ்தானின் ஆணாதிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருநங்கை ஒருவருக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த படம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் அந்தப் படம் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இம்மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது.

இந்த நிலையில், ‘ஜாய் லேண்ட்’ படத்துக்கு திடீரென பாகிஸ்தானில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்து இந்த படத்தை தடை செய்வதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தின் சில காட்சிகள், சமூக ஒழுக்க விதிமுறைகளை மீறுவதாகவும்  கண்ணியக் குறைவாக உள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com