ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் நம்ம CM! -அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

 ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் நம்ம CM! -அமைச்சர் உதயநிதி பெருமிதம்!
Published on

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று (09.01.2023) ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் அரசின் கொள்கைகளை விளக்கினார். எனினும் திராவிட மாடல், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டார்.

இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆளுநர் தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். இறுதியாக தீர்மானம் நிறைவேறியது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வர் என்றால் அது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்” என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் ஒரு சம்பவத்தை நமது முதலமைச்சர் செய்துள்ளார். பொதுவாக நம் தலைவர் சட்டப்பேரவையில் பேசும்போதும், அறிவிப்புகளை வெளியிடும் போதும்தான் எதிர்கட்சிகளை ஓட விடுவார். ஆனால், இன்று ஆளுநரையே ஓட விட்டு இருக்கிறார் என்றார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த ட்வீட்டில், 

“தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக, அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென, முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற மரபைகாத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com