Job Opportunities
Job Opportunities

இரண்டரை லட்சம் பேர் வேலைக்கு பதிவு செய்ததில், 32 பேருக்குத்தான் வேலை தரப்பட்டதா?

Published on

குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு துறைகளில் அரசு வேலைக்காக பதிவு செய்த இரண்டரை லட்சம் இளைஞர்களில் 32 பேருக்குத்தான் வேலைக் கிடைத்தது என்ற செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அரசு வேலைக்காக அகமதாபாத்தில் 22 பேர், பாவ்நகரில் 9 பேர் மற்றும் காந்தி நகரிலிருந்து ஒருவர் என மொத்தம் 32 இளைஞர்கள் மட்டுமே குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவையில் இதனைப் பற்றி எம்.எல்.ஏ ஒருவர் கேள்வி எழுப்பினார்.  அதாவது குஜராத்தில் உள்ள 29 மாவட்டங்களில் சுமார் 2,38,978 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அதேபோல் பகுதிநேர கல்வி பயின்ற 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்திருக்கின்றனர். மேலும் அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி குஜராத்தின் ஆனந்தில் 21,633 பேர் அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல் வதோராவில் 18,732 பேர், அகமதாபாத்தில் 16,400 பட்டதாரி இளைஞர்கள், தேவ்பூமி துவாரகாவில் 2362 பேர் வேலைக்காக இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அவ்வளவு பேர் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும்போது வெறும் 32 பேருக்கு மட்டுமே இந்த இரண்டாண்டுகளில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தனித் தீர்மானம்!
Job Opportunities

எம்.எல்.ஏ வின் இந்த நச் கேள்விக்கு மாநில தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் மழுப்பியவாறே பதிலளித்தார். குஜராத் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 46 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அலுவலகங்களின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஏற்பாடு போதிய அளவு மக்களுக்கு சென்றடையவில்லை. மேலும் இந்த பிரச்சனையை போக்கவும், மக்கள் எளிதில் தகவலை பெறுவதற்கும் ஒரு செயலியை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பதிலளித்தார்.

எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு பதில் கூறமுடியாமல் தடுமாறிய அமைச்சர் பல்வந்த் சிங், ஒருவழியாக மழுப்பிக்கொண்டே பதிலளித்தார். மேலும் குஜராத் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தடுமாறும் நிலை அதிகம் ஏற்பட்டுள்ளதாவும் ரிப்போர்ட் கூறுகிறது.

logo
Kalki Online
kalkionline.com