ரம்ஜான் உதவி கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலி; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

ரம்ஜான் உதவி கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலி; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மன்சூர் ஹைதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது எமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். எட்டு வருடங்களாக நடக்கும் இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதனிடையே, ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். இவ்வாறு ஏமனில் அனைத்து புறங்களிலும் சண்டை நடைபெற்று வருகிறது. ஏமன் உள்நாட்டுப் போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று இருக்கிறார்கள்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் அவ்வப்போது மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் ஏமனில் இருபது கோடி மக்கள் அடிப்படை உதவிகளை எதிர்நோக்கி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏமன் இஸ்லாமிய நாடு. இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் ஏழை, எளிய மக்களுக்கு தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்து இருந்தனர். அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் அங்கு கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டு உதவிகளைப் பெற முயன்றதால், அந்தக் நெரிசலில் சிக்கி 85 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், 322 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். இதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து, ஏமன் நாட்டின் போராட்டக் குழுவான ஹவுத்தி போராளிகள் குழு தங்கள் தொலைக்காட்சியில், அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பறிபோனதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. அந்தச் செய்தியில் ஆங்காங்கே சடலங்கள் வரிசையாக குவித்து வைக்கப்பட்டுள்ளது காட்டப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com