ஓவர் போதை... சுட்டுத் தள்ளிவிட்டு நிர்வாணமாக ஓடிய மாடல் அழகி!

ஓவர் போதை... சுட்டுத் தள்ளிவிட்டு நிர்வாணமாக ஓடிய மாடல் அழகி!

போதை தலைக்கேறினால் தலைகால் புரியாமல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக, காதலியே காதலனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மாடல் அழகியான மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ். இவரது காதலன் ஜோர்டான் லோம்பார்டி. இருவருக்கும் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதில் மார்செல்லாவுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்செல்லாவும், ஜோர்டான் லோம்பார்டியும் பிரேசிலியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது இருவரும் அளவுக்கதிகமான போதையில் இருந்துள்ள நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த லோம்பார்டி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காதலியை மிரட்டியுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய வேளையில், திடீரென காதலி மார்செல்லா, காதலனின் கையில் இருந்த துப்பாக்கியை வெடுக்கென பிடுங்கி, அவரை சுட்டுள்ளார்.

காதலனை சுட்ட அதேவேகத்தில், நிர்வாணகோலத்தில் அங்கிருந்து தப்பி, ஹோட்டல் வாயிலை அடையும்போது, அங்கு நின்றிருந்த லோம்பார்டியின் ஓட்டுநரையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

அதையடுத்து, ஒரு பள்ளி பேருந்தை துப்பாக்கி காட்டி மிரட்டி அதில் தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் து ஓட்டுனரை துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பித்து சென்று உள்ளார். படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியைத் தேடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com