வலியற்ற மரண தண்டனை; உச்ச நீதிமன்ற பொதுநல வழக்கு தள்ளிவைப்பு!

வலியற்ற மரண தண்டனை; உச்ச நீதிமன்ற பொதுநல வழக்கு தள்ளிவைப்பு!
Published on

ந்தியாவின் உச்சபட்ட தண்டனையான மரண தண்டனை, தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருவதே இன்றுவரை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஒருவருக்குத் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு மாற்றாக வலியற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ’’தூக்கு தண்டனையை நிறைவேற்றும்போது ஏற்படும் வலி, உயிர் பிரிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் போன்ற அறிவியல் ரீதியான தரவுகள் தேவை. மேலும் இது தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இது குறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்” என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்குபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com