காஷ்மீருக்கும் காசா நிலைதான் ஏற்படும்: பாரூக் அப்துல்லா எச்சரிக்கை

farooq abdullah
farooq abdullahenglish.cdn.zeenews.com
Published on

“காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வராவிட்டால் காசா நிலைமைதான் காஷ்மீருக்கு ஏற்படும்” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் பாரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சமீபத்தில்  நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீர்ர்களும் அதைத் தொடர்ந்து மூன்று அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில் பாரூக் அப்துல்லாவின் கருத்து வெளியாகியுள்ளது.

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதலால் காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட கதிதான் நமக்கும் ஏற்படும் என்று அவர் கூறினார்.

பாரூக் அப்துல்லா விளக்கினார். “முன்னாள் பிரதமர் வாஜ்பேயி ஒரு முறை நாம் நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால், நமது அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார். அண்டை வீட்டாருடன் நட்புறவுடன் இருந்தால் இருவரும் முன்னேறலாம்” என்று கூறியிருந்தார். பிரதமர் மோடியும், போரிடுவது சரியான முடிவல்ல, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் என்று பாரூக் சூட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தை எப்போது? நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா அதற்கு தயாராகாத தன் பின்னணி என்ன என்று பாரூக் கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்த ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பயங்கரவாதிகள் மறைவிடமாக பயன்படுத்தும் குகைகளை அகற்றுமாறு உள்ளூர் ராணுவ வீர்ர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனிடையே ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை 7-வது நாளாகத் தொடர்ந்தது. அப்பகுதியில் நான்காவது நாளாக இணையதள வசதிகள் முடக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புதன்கிழமை ரஜெளரி மற்றும் பூஞ்ச் பகுதிக்கு புதன்கிழமை சென்று பார்வையிடக்கூடும் என்றும் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்களுடன் அவர் உரையாடக்கூடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com