இந்திய மீனவர்கள் 200 பேரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு!

இந்திய மீனவர்கள் 200 பேரை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு!

டல் கடந்து மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் பலரையும் பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்து வைத்து இருக்கிறது. சென்ற மாதம், சட்ட விரோதமாக கடல் கடந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 198 இந்திய மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு சார்பில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டிருக்கும் மீதமுள்ளவர்களையும் ஜூன் மாதம் விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருந்தது.

அதைத் தொடர்ந்து, அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய மீனவர்கள் மற்றும் மூன்று சிவில் கைதிகளை பாகிஸ்தான் அரசு இன்று விடுவிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அறிவித்து இருக்கிறார். நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, பாகிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தான் 200 இந்திய மீனவர்களையும் 3 சிவிலியன் கைதிகளையும் இன்று விடுவிக்கிறது. முன்னதாக, 198 இந்திய மீனவர்கள் 12, மே 2023 அன்று திருப்பி அனுப்பப்பட்டனர்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com