பாகிஸ்தானின் 170 பில்லியன் வரி விதிப்பு கலக்கத்தில் மக்கள்!

பாகிஸ்தானின் 170 பில்லியன் வரி விதிப்பு கலக்கத்தில் மக்கள்!
Published on

பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான் அரசு.

பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்துள்ளது, பொருளாதாரச் சரிவில் இருந்து அதைத் தடுக்கவே தற்போது ஐஎம்எப் குழு பரிந்துரைப் படி 170 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை விதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்க உள்ளது பாகிஸ்தான் அரசு.

ஐபிஎம்-யிடம் நிதியுதவி பெற முடிவு செய்து 7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் திட்டத்திற்காக IMF உடனான ஒப்பந்தத்தைச் செய்யப் பாகிஸ்தான் அரசு முக்கியமான இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார், 7 பில்லியன் டாலர் அளவிலான கடன் திட்டத்தை முடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து IMF அமைப்பிடம் இருந்து ஒரு ஒப்பந்த அறிக்கை பெற்றுள்ளதாகக் கூறினார்.

ஐபிஎம்-யிடம் கடன் பெற வேண்டும் என்றால் வருவாய் மற்றும் நிதி நிலையை மேம்படுத்த நம்பிக்கை அளிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக 7 பில்லியன் டாலர் கடன் பெற பாகிஸ்தான் அரசு 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க உள்ளது. இந்த அறிவிப்புப் பாகிஸ்தான் மக்கள் பெரிய அளவில் பாதித்துள்ளது.

பாகிஸ்தான் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அந்நாட்டு மக்கள் அடிப்படை சேவைகள் கூட முழுமையாகப் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளிடம் புதிய நிதியுதவிக்காக முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான் அரசு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com