பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு!

பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளான நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றுள்ளன.

போட்டியின் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பைக் , தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 1500காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 160 பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும், 6 மொபைல் மருத்துவக்குழுவினர், 108ஆம்புலன்ஸ்கள் 15, 60பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வாகனங்களும் தயார் நிலையைல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் குடல் சரிந்து கீழே விழுந்தார். உடனே அவருக்கு அங்கிருந்த மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்கை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com