பழனி முருகன் கோவில்
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு!

Published on

பழனி  தண்டாயுதபாணி முருகன் கோயிலில் வருகிற ஜனவரி மாதம் 27-ம் தேதி  கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அக்கோவிலின் அறங்காவலர் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பழனி முருகன் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இதுகுறித்து பக்தர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சில மாதங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று சீராய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, வருகிற ஜனவரி மாதம் பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் கூறினார்.

இதையடுத்து இன்று பழனி முகன் கோவிலில் வருகிற ஜனவரி மாதம் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்  என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இம்மாதம் 25-ம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18-ம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அக்கோவிலின் அறங்காவலர் குழு  தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com