பழைய கால நினைவுகளைத் தூண்டி மக்களைக் கலங்க வைத்த பாம்பன் ரயில்வே பாலம் இடிப்பு விவகாரம்!

பழைய கால நினைவுகளைத் தூண்டி மக்களைக் கலங்க வைத்த பாம்பன் ரயில்வே பாலம் இடிப்பு விவகாரம்!

கடந்த காலத்தின் கதறல் எதிரொலியுடன், பாம்பன் பகுதியில் வசிப்பவர்கள் சமீபத்தில் இந்தியாவின் பழமையான கடல் பாலம் அகற்றப்படுவதைக் கண்டனர். இடிபாடுகளைக் காண கூடியிருந்தவர்கள், பாலத்தின் நடைபாதையிலும், ரயில்களுக்குள்ளும், கரைகளிலும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் சக்திவாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தின் மீது ரயில்கள் சுழல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த பழைய நாட்களைப் பற்றி பேசினர்.

ஐஐடி-மெட்ராஸின் நிபுணர்களால் வைக்கப்பட்ட கண்காணிப்பு சாதனம் பாலத்தில் அதிக அதிர்வுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, கடந்த டிசம்பரில் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ரயில் சேவையை முற்றிலுமாக நிறுத்தி வைத்த ரயில்வே அதிகாரிகள், புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்தனர். மண்டபம் மற்றும் பாலத்தை இணைக்கும் 889 மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகள் இதுவரை அகற்றப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் செல்லும் 275 மீட்டர் தண்டவாளத்தை பிரித்து எடுக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுடன் நிலப்பரப்பில் உள்ள மண்டபத்தை இணைக்கும் வகையில் 1914 பிப்ரவரி 24 அன்று பாம்பன் பாலம் ரயில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. 1988ல் கடல் இணைப்புக்கு இணையாக சாலைப் பாலம் கட்டப்படும் வரை இரு இடங்களுக்கு இடையே பயணிக்க ஒரே வழி இதுதான். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள 'Marvels of the South Indian Railway' என்ற புத்தகத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாலம் சிகாகோவின் ஷெர்சர் ரோலிங் லிஃப்ட் பிரிட்ஜ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் UK நிறுவனமான ஹெட் ரைட்சன் & கோ லிமிடெட் மூலம் கட்டப்பட்டது.

புதிய கடல் இணைப்புக்கான பணிகள் இப்போது 535 கோடி ரூபாய் செலவில் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர், வரும் நாட்களில் பாலம் அகற்றும் பணிகள் நிறைவடையும் என்றார். "பொதுமக்கள் பணியிடத்திற்குள் நுழைவதைத் தடுக்க கட்டமைப்பின் இருபுறமும் வேலிகளை எழுப்பியுள்ளோம். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. Aproach Girder launching பணி 76% நிறைவடைந்துள்ளது, பாதையை இணைக்கும் பணி 60% நிறைவடைந்துள்ளது, லிப்ட் ஸ்பானின் புனையமைப்பு 98% மற்றும் கோபுரங்களை உருவாக்குதல் பணிகள்67% நிறைவடைந்துள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய பாலம் தயாராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாம்பன் பகுதியில் உள்ள மக்களின் நினைவுச் சின்னமான இந்தப் பாலத்தை அகற்றும் விவகாரத்தில் இன்னும் அனைவருக்குமான ஒரு புரிதல் வந்தபாடில்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஏனெனில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.பேட்ரிக் கூறும்போது, “இந்தப் பாலத்தை கடந்த 50 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். என் கருத்துப்படி, பாலம் நான் முதலில் பார்த்ததைப் போலவே இப்போதும் பலமாகவே இருந்தது. நாம் அனைவரும் பாதசாரி பாதையில் பல நாட்களைக் கழித்தோம், கடல் இணைப்பின் நூற்றாண்டு விழா எங்களுக்கு ஒரு பெரிய தருணம். இந்த பாலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். தற்போது தண்டவாளங்கள் பிரிந்து கிடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தொழில்நுட்ப அதிசயம் மற்றும் வரலாற்று நினைவுச்சின்னம் என்பதால் இந்தப் பாலத்தை அப்படியே விட்டிருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com