உடனே இதை செஞ்சு முடிங்க..! டிசம்பர் 31-க்குள் இதை செய்ய தவறினால் பான் கார்டு செயலிழக்கப்படும்..!

PAN Card
PAN Card
Published on

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன் படி, 2025 டிசம்பர் 31-க்குள் உங்கள் பான் (PAN) எண்ணை ஆதார் (Aadhaar) எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். இதைச் செய்யாதவர்களின் பான் கார்டு எண் 2026 ஜனவரி 1 முதல் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?

1.அதிகாரப்பூர்வ வருமான வரி மின்-தாக்கல் (e-filing) தளமான https://www.incometax.gov.in/iec/foportal/ சென்று, இடது பக்கத்தில் உள்ள “Link Aadhaar” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2.உங்கள் PAN எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.

3.பின்னர் “Validate” என்பதைக் கிளிக் செய்து இணைப்பை உறுதிசெய்யவும்.

பான்-ஆதார் இணைப்பு நிலையை சரிபார்ப்பது எப்படி?

1.அதே வருமான வரி தளத்துக்குச் சென்று “Link Aadhaar Status” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2.உங்கள் PAN மற்றும் ஆதார் எண்களை உள்ளிடவும்.

3“View Link Aadhaar Status” என்பதைச் சொடுக்கி, உங்கள் இணைப்பு நிலையை உடனே காணலாம்.

SMS மூலமாக இணைப்பு நிலை தெரிந்து கொள்வது

1. உங்கள் மொபைல் போனில் கீழ்கண்ட வடிவில் குறுஞ்செய்தியை டைப் செய்யவும்:

 UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்>

2. இதை 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

3. சில நொடிகளில் உங்கள் பான்-ஆதார் இணைப்பு நிலை குறித்த உறுதிப்படுத்தல் செய்தி வரும்.

இணைக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்

2026 ஜனவரி 1 முதல், இணைக்காதவர்களின் PAN எண் செயலிழக்கப்படும்.

இதனால் வங்கிக் கணக்கு, வருமான வரி தாக்கல், முதலீடு, சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல நிதி நடவடிக்கைகளில் தடைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தை நிமிஷத்தில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் வீட்டுத் துப்புரவு பணிகள்!
PAN Card

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com