

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கக் கூடிய ’பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பும் மிகப் பெரிய அளவில் உள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலிலா என நடிகர் பட்டாளம் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஜனநாயகனை தொடர்ந்து நாளை (ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வந்த நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்.அறிவிக்கப்பட்டபடி படம் நாளை வெளியாகிறது.