நாடாளுமன்றத்தில் கைக்குழந்தையுடன் வந்த YSRCP எம்.பி. மகாதேவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பங்கேற்ற YSRCP எம்பி மகாதேவி தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடியிடம் குழந்தையை காட்டி ஆசிர்வாதம் பெற்றார். மேலும் மற்ற எம்பிக்கள் மோடியை குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடமும் குழந்தையை காட்டி ஆசி பெற்றார். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எம்பி மகாதேவி, மோடியிடம் குழந்தையை காட்டியது குறித்து பேசினார்.
நாடாளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த எம்பி படிக்கட்டில் நின்றபடி புகைப்படம் எடுத்து கொண்டார். இதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு NCP எம் எல் ஏ சரோஜ் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதியின்மை குறித்து மகாராஷ்டிரா சட்டபேரவையில் சுட்டிகாட்டினார்.
மேலும் 2017ஆம் ஆண்டு பாஜக எம்பி நாடாளுமன்றத்தில் காப்பக வசதியின்மை குறித்து பேசினார். இவர்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் டே கேர் கொண்டுவரப்பட்டது. தற்போது இதன் தொடர்ச்சியாகவே எம்பி தனது குழந்தையை நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.