நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 29-ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு இவைகள் குறித்த பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோத்தக்களை கொண்டுவரக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வர்த்தக முத்திரைகள் திருத்த மசோதா, பொருட்களின் புவியியல் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, மத்திய வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நூலகக் கட்டிடத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி, காங்கிரஸின் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அதிமுகவின் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய சீன எல்லைப்பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஒரே நாளில் தேர்தல் ஆணையரை நியமித்தது, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது இவைகளை குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com