புதிய நாடாளுமன்ற மக்களவையில் நுழைந்த மர்ம நபர்கள்... கலர் புகை வீசியதால் பரபரப்பு... கேள்விக்குரியாகும் பாதுகாப்பு?

ParlimentAttack
ParlimentAttack

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு நாளான இன்று மீண்டும் மர்ம நபர்கள் இருவர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் நுழைந்து மஞ்சள் நிறத்திலான புகை வீசியும், கோஷம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தின்போது நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதை அடுத்து, நிகழ இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 9 பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி உள்பட பலரும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மாநிலங்களவைத் தலைவர், மக்களவை சபாநாயருடன் இணைந்து தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து பேசினார்கள்.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளின் அன்றாட நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் மதியம் ஒரு மணியளவில் உறுப்பினர்கள் விவாதித்துக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை

மக்களவையில் நுழைந்த இரு நபர்களில் ஒருவரை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த பாதுகாவலர்கள் பிடித்தனர். ஆனால், மற்றொரு நபர் மாடத்தில் இருந்து எம்பிக்கள் இருக்கும் பகுதியில் குதித்தார். தொடர்ந்து அவர் எம்பிகள் இருக்கைகளில் ஏறி சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினார். ஆனால், அங்கிருந்த சில மக்களவை உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர்.

இதனையடுத்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அந்த நபர்,சர்வாதிகாரம் கூடாது என கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இந்தியில் கோஷம் எழுப்பியதால் அவர் என்ன கூறினார் என அரசு தரப்பில் தற்போதுவரை உறுதிப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற டிரான்ஸ்போர்ட் பவன் அருகே ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் கலர் புகைகளை வீசியுள்ளர். இதனையடுத்து அவர்களுக்கு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதலில் மொத்தம் 4 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஷிண்டோ 25 வயது, ஹாரியானா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான நீலம் என்ற பெண் என தெரியவந்துள்ளது.

பொதுவாக நாடாளுமன்றத்தில் பார்வையாளர் வரவேண்டும் என்றால், எம்பி ஒருவரின் பரிந்துரை கடிதம் வேண்டும். இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மைசூர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பெயரில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததாக எம்பி டானிஷ் அலி தெரிவித்து இருக்கும் கருத்து கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு நாளான இன்று மீண்டும் மர்ம நபர்கள் நான்கு பேர், அதேநாளில் தாக்குதல் நடத்திருப்பது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீதியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com