திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களில் வாழ்வாதார முன்னேற்றமும் திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181- ஐ நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

12 ஆண்டுகளாக வறுமைப் பிடியிலும், இருளில் வாழ்ந்து வரும் 12,200 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181- ஐ நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் சுற்று பயணம் வந்த கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் பணி நிரந்தரம் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், தேர்தல் அறிக்கை 181யில் தமிழக முதலமைச்சர் எங்களுக்கு பணி நிரந்திர செய்வோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

Anbil Mahesh
Anbil Mahesh

அதன் இதுவரைக்கும் அதற்கு எந்த முன்னேற்பாடுகளும் எதும் செய்யவில்லை. அமைச்சர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் ஓடி சென்று மனுக்களை கொடுத்து வருகிறோம். நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை .

எங்களது கோரிக்கை ஓன்று தான் பணி நிரந்தர ஆணையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஒரே முடிவோடு அனைத்து மாவட்டத்திலும் இருக்கக்கூடிய பகுதி நேர ஆசிரியர்கள் இங்கு வந்துள்ளோம். முதலமைச்சரை சந்திப்பதற்கு முயற்சிகள் எடுத்தாலும் இதுவரை எங்களை பார்ப்பதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை பணி ஆணையை கொடுக்கும் வரை காலவரையின்றி போராட்டம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வந்த இடங்களிலும் பணி நிரந்தரம் கேட்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர், பள்ளிக் கல்வி செயலாளர், பள்ளிக் கல்வி ஆணையர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் என அனைவரிடமும் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்திப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com