PDF ஃபைல்களை அதிகம் டவுன்லோட் செய்வோர் ஜாக்கிரதை!

PDF ஃபைல்களை அதிகம் டவுன்லோட் செய்வோர் ஜாக்கிரதை!
Published on

மது ஸ்மார்ட்போனில் எந்தக் கோப்புகளை நாம் பதிவிறக்கம் செய்தாலும் அது டவுன்லோட் என்ற போல்டரில் சேமிக்கப்படும். இப்படி அந்த போல்டரில் அதிகப்படியாக PDF ஃபைல்களை டவுன்லோட் செய்து வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். 

உடனடியாக உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் டவுன்லோட் போல்டருக்குச் சென்று அதிகப்படியான PDF பைல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ளீர்களா என்று சரிபாருங்கள். ஒருவேளை நீங்கள் அதிகப்படியான பிடிஎப் பைல்களை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால், இந்தப் பதிவு உங்களுக்காகத்தான். அடுத்தமுறை ஏதாவது பிடிஎஃப் கோப்புகளை நீங்கள் டவுன்லோட் செய்யும்போது உஷாராக இருக்க வேண்டும். 

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துமே டிஜிட்டல் வடிவில் நமக்குக் கிடைக்கிறது. அதில் PDF ஃபைல்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. பான் கார்டு, ஆதார் கார்டில் தொடங்கி டிஜிட்டல் ரசீதுகள் வரை, பலவிதமான தகவல்களை பிறருக்குப் பகிர்வதற்கும், பாதுகாத்து சேமிப்பதற்கும் pdf ஃபைல்கள் பயன் படுத்தப்படுகிறது. எனவே இணையத்தில் எந்த ஒரு pdf ஃபைலை நாம் பதிவிறக்கம் செய்யும்போதும், சைபர் மற்றும் ஆன்லைன் குற்றங்களில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டுமென சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். 

சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது மூலம், pdf ஃபைல்களை சேமிப்பது மூலம் ஏற்படும் சைபர் குற்றங்களிலிருந்து உங்களையும் உங்கள் ஸ்மார்ட்போனையும் பாதுகாக்க முடியும். 

  1. முதலில், இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் பைல்களில் ஸ்மார்ட்போனுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் பதிவிறக்கம் செய்த பிடிஎப் பைலை திறப்பதற்கு முன், உங்கள் சாதனத்தில் நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

  2. இரண்டாவது, நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎப் பைல்கள், நம்பத்தகுந்த இணையதளங்களிலிருந்து பெறப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும். இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் அனைத்துமே பாதுகாப்பானது என்று நம்ப வேண்டாம். சந்தேகத்திற்கிடமான இணையதளங்களில் இருந்து ஒருபோதும் எதையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். 

  3. அடுத்ததாக, நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது கிளிக் செய்யும் லிங்க் சரியானதுதானா என்று கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் இணையதளங்களில் ஏமாற்றுக்காரர்கள் டவுன்லோட் என்கிற பெயரில் உங்கள் டேட்டாக்களை திருடும் லிங்குகளை இடையில் வைத்திருப்பார்கள். அது தெரியாமல் நீங்கள் கிளிக் செய்யும் பட்சத்தில், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. 

  4. அடிக்கடி பாப் அப் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்களில் இருந்து பிடிஎப் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும். இது பெரும்பாலும் ஸ்கேம் செய்பவர்களின் வேலையாகத் தான் இருக்கும். 

  5. இறுதியாக பிடிஎஃப் பைல்களை பதிவிறக்கம் செய்வதற்கு ஒருவரின் தனிப்பட்ட தகவலைக் கேட்கும் எந்த இணையதளம் வாயிலாகவும் உங்களுக்குத் தேவையான கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இவைகள் ஒருவேளை பிஷ்ஷிங் முயற்சிகளாக இருக்கலாம். அதாவது, ஹேக்கர்கள் உங்களின் முக்கியமான தரவுகளை திருடும் முயற்சியாக இருக்கலாம். 

எனவே, இணையதளத்தில் பிடிஎப் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன், மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு கவனமாக செயல்படுங்கள். இணையதளத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்துமே உண்மை என நம்பிவிட வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com