வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்புகிறது - பாதுகாப்புப் படைகளை திரும்ப பெறுவதாக அமித்ஷா அறிவிப்பு!

வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்புகிறது - பாதுகாப்புப் படைகளை திரும்ப பெறுவதாக அமித்ஷா அறிவிப்பு!
Published on

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ( AFSPA) அமலுக்கு உள்ள இடங்களில் செயல்பாடுகள் குறைக்கப்படுவதாகவும் அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார்

2015ல் திரிபுராவிலிருந்.தும் 2017ல் மணிப்பூரிலிருந்தும், 2018ல் மேகலாயாவிலிருந்தும் படிப்படியாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தற்போது அஸ்ஸாமில் ஒரு மாவட்டத்திலும், மணிப்பூரில் வாங்கோய், லெம்காங், நம்போல், நோய்ரங் உள்ளிட்ட நான்கு காவல் கண்காணிப்பு மாவட்டங்களிலும் விலக்கிக் கொள்ளப்படுகிறது

வடகிழக்கு எல்லையோர மாநிலங்களில் நடைபெறும் தீவிரவாத பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சகம், 2014 ஆண்டோடு ஒப்பிடும்போது, 2022 ஆண்டில் 76 சதவீத தீவிரவாத நடவடிக்கைககள் குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவது 90 சதவீதம் குறைந்திருப்பதாகவும் தீவிரவாத குழுக்களால் எல்லை பாதுகாப்புப் படைகள் தாக்கப்படுவது 97 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பதட்டமுள்ள பகுதிகளை கண்காணித்து, அங்கிருந்தும் பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறுவது பற்றி மாநில அரசுகளுடன், மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பதுதான் வடகிழக்கு மாநில மக்களின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. இதனால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து வந்தார்கள்.

வடகிழக்கு எல்லையோர மாநிலங்களில் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஏராளமான தீவிரவாத நடவடிக்கைகளும், எல்லை பாதுகாப்புப் படைகளில் எல்லை மீறல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

மணிப்பூரை பொறுத்தவரை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து ஏராளமான போராட்டங்கள், குறிப்பாக பெண்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டன. எராளமான இளைஞர்கள் விசாரணை என்னும் பெயரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் அழைத்துச் செல்லப்படுவததை தடுக்க பெண்கள் ஓரணியில் திரண்டார்கள்.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினருக்கும் தீவிரவாத படைக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐரோம் ஷர்மிளா என்னும் பெண்மணி, சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம், 16 ஆண்டுகள் நீடித்தது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்ப் பெற்றுக்கொண்டபோது, உண்ணாவிரதத்தை கைவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார். மணிப்பூரின் முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட ஐரம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

அரசியலில் இருந்து மட்டுமல்ல, சொந்த ஊரான மணிப்பூரிலிருந்தும் கிளம்பி தமிழகத்திற்கு வந்து சேர்ந்தவர். இன்று தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com