எல்லை மீறும் தாலிபான்கள். கோபத்தில் ஆப்கன் பெண்கள்!

எல்லை மீறும் தாலிபான்கள். கோபத்தில் ஆப்கன் பெண்கள்!
Published on

ப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தாலிபான்கள் விதிக்கும் கட்டுப் பாடுகளால் அவர்கள் ஏற்கனவே திணறிப்போயுள்ள நிலையில், இப்போது புதிதாக இன்னொரு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இங்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டினால் பெண் குழந்தைகள் ஸ்கூலுக்குப் போகாமல் தவித்து வருகின்றனர். தற்போது அனைத்து தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் பெண்கள் இணைந்து படிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆண்கள் துணை இன்றி பெண்கள் விமானங்களில் பயணிக்க கூடாது, அதீத ஆடைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிக் கூடம், பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களுக்கு பெண்களுக்கு செல்லத் தடை என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆண் டாக்டரை பெண்கள் சந்திக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான கல்வி முற்றிலுமாக மறுக்கப்படுவதால், அங்கே பெண் டாக்டர்கள் உருவாவதில் சிக்கல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி அங்குள்ள துணிக்கடைகளில் வைக்கப்படும் பெண் உருவ பொம்மைகளுக்கு கூட முகத்தை மறைத்தே காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். 

பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது, தோட்டங்களுக்குப் போகக்கூடாது, புல்வெளி அமைந்துள்ள ஹோட்டல்களுக்குப் போகக்கூடாது, பியூட்டி பார்லர் செல்லக்கூடாது என்றெல்லாம் பல தடைகள் தொடர்கிறது. இதையும் தவிர்த்து சில பெண் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதற்காக, உணவில் விஷம் வைக்கும் சம்பவமெல்லாம் நடந்துள்ளது. அந்நாட்டில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளியை சேர்ந்த 80 சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்டது.

ஏற்கனவே புர்கா அணியாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு அங்கே இருந்தாலும், புதியதாக காரில் செல்லும்போது கூட புர்கா கட்டாயம் அணிய வேண்டும் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை புர்கா அணியாத பெண்களை வாகனத்தில் அழைத்துச் சென்றால், அந்த டிரைவரை தாலிபான்கள் தாக்குவார்கள் என்றும், அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். 

பெண்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இத்தகைய கடுமையான உத்தரவுகளால் ஆப்கன் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com