தமிழக ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்!

கிரிக்கெட்
கிரிக்கெட்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் ஓய்வு பெற்ற ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி 2004-ம் ஆண்டுக்கு முன்பாக 10 முதல் 20 ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல் 2004-ம் ஆண்டுக்கு முன்பு 1 முதல் 5 ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மூலம் நிதியுதவி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு இப்படி மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாகவும், அதனைப் பெறத் தகுதியுள்ள தமிழக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com