பட்ஜெட் குறித்து பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என பல தரப்பினிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் வரி அடுக்குகள் மற்றும் வடி வரம்பிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டால், செலவு செய்வதற்கான அதிக ரொக்கத் தொகை மக்களிடம் இருக்கும். இது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொது நுகர்வில் ஏற்பட்ட மந்தநிலையை சரிசெய்ய உதவி நாட்டில் உருவான பொருளாதார மந்தநிலையிலிருந்தும் மீள உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய வரி அடுக்கின்படி, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு எந்த வரியும் கிடையாது. அதேசமயம் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 5 சதவீதம் வரி கழிக்கப்படலாம். இருப்பினும், அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால், விலக்கு சிறியதாகத் தெரிகிறது. வரி விலக்கு வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்த பட்ஜெடில் உள்ள முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவில் வரவிருக்கும் பட்ஜெட்டில் 2023 தங்கம் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலையானது அதிகரித்து வரும் நிலையில்,தங்க கடத்தலும் அதிகரித்து வருகின்றது. ஆக இதனை கட்டுப்படுத்த அரசு இப்படி ஒரு முடிவினை எடுக்கலாம்.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலையானது கடந்த சில மாதங்களாகவே உச்சம் எட்டி வரும் நிலையில், இது தங்க நகை வடிவமைப்பாளர்கள் மத்தியில், தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதிக வரியினால் ஏற்படும் பிரச்சனைகளை அரசு அறிந்து கொண்டுள்ளது. ஆக அதனை விரைவில் சரி செய்யலாம். ஆக இதுவும் தங்கம் வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.