தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள் !

தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த மக்கள் !

இன்று தை அமாவாசை முன்னிட்டு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக ராமேஸ்வரத்தில் குவிந்தனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு தை அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை மற்றும் ஐதீகம். அமாவாசை நமது இறந்து போன முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுப்பாத்து இந்து மக்களின் வழக்கம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை. இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நன்னாளில் ராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடியும் மற்றும் இராமநாதசாமி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சிரமமின்றி புனித தீர்த்தங்களில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளது. அதேபோல பக்தர்களின் வசதிக்காக குடிநீர் ஏற்பாடுகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சிநிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com