ரூ.2000 நோட்டுகளை கொடுத்து உணவு, தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

ரூ.2000 நோட்டுகளை கொடுத்து உணவு, தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2000 நோட்டுகளை திரும்ப பொறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை உணவு டெலிவரியின் போது கொடுக்கவும் மற்றும் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தி தங்க நகைகள் வாங்கவும் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் சோமேட்டோ நிறுவனம், உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2000 நோட்டுகளையே தருகின்றனர் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து சோமேட்டோ நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், ரூ.2000 நோட்டுகளை திரும்ப பொறுவதாக ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளின் Cash on Delivery போது பெரும்பாலான வாடிக்கையாளர் ரூ.2000 நோட்டுகளை செலுத்த தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தி தங்க நானயங்கள் மற்றும் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர். அரசாங்கம் எப்போது எந்த ரூபாய் நோட்டுகளை எப்போது திரும்பபெறும் என்ற அறிவிப்பை வெளியீடும் என்ற குழப்பத்தில் மக்கள் தற்போது தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதேநேரம் ரூ.2000 நோட்டுகளுடன் தங்க நகை வாங்கும் மக்களிடத்தில் நகை கடை உரிமையாளர்கள் தங்கத்தின் விலையைவிட அதிகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதேபோல், 1 லட்சத்து 99 ஆயிரத்திற்கு மேல் Hot Cash கொடுத்து தங்கம் வாங்கினால் வாடிக்கையாளர்கள் பான் கார்டு கொடுக்கவேண்டும். இதனால், ரூ.2000 நோட்டுகளுடன் தங்க கடைக்கும் வரும் வாடிக்கையாளர்கள் 1,99,000 மேல் தங்கம் வாங்குவதாக இருந்தால் கட்டாயம் பான் கார்டு கொண்டு வர நகை கடை உரிமையாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சட்டப்படி, திருமணமான பெண் 500 கிராம் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம் தங்கத்தையும், ஆண் 100 கிராம் தங்கத்தையும் வைத்திருக்கலாம். ஆனால், இதற்கு மேல் தங்க ஆபரணங்கள் ஒருவரிடம் இருந்தால் கட்டாயம் ரசீது மற்றும் அரசிடம் கணக்கு காட்ட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com