ஜப்பானில் ஒரே நிமிடத்தில் மறைந்துப் போகும் மக்கள்!

People Vanish
People Vanish
Published on

ஒரு இடத்தில் திடீரென்று ஒருவர் இல்லாமல் மறைந்துப் போனால் எப்படி இருக்கும். அவர் இருந்த இடமே தெரியாமல், அப்படியே காணாமல்போனால், அதை மர்மம் என்றுதானே சொல்வோம். அப்படியொரு மர்மம்தான் ஜப்பானில் நடக்கிறது.

காற்றில் கலந்துவிடலாம் என்று வாய்ப்போக்கில் வேண்டுமென்றால் சொல்லலாமே தவிர, ஒருபோதும் நம்மால் காற்றில் கலக்க இயலாது. உடம்பு மண்ணுக்குத்தான் என்பது விதி. ஆனால், திடீரென்று நீங்கள் இருந்த இடத்தைவிட்டு ஒரே நிமிடத்தில் காணாமல் போனால்? என்னாகும்? நினைத்துப் பாருங்களேன்.

அதேபோல்தான் ஜப்பானில் பல வருடங்களாக மக்கள் சட்டென்று காணாமல் போகிறார்கள். நேற்று இருப்பவர்கள் திடீரென்று இன்று காணாமல் போகிறார்கள். இப்படி மக்கள் மறைவது தொடர்க்கதையாக இருந்து வந்த நிலையில், ஒரு திடுக்கிடும் செய்தி வந்தது.

ஆம்! காணாமல் போன மக்கள் எங்கே? நிஜமாலுமே அவர்கள் காற்றில் கலந்துவிடுகிறார்களா? அந்த மக்களின் நிலை என்ன? என்பன போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியவந்தது.

ஜப்பானில் ஒரு மையம் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அந்த சேவையில், மக்கள் இருந்த இடம் தெரியாமல், அவர்களின் இருப்பை அழித்துவிடுவார்கள். இந்த சேவையில் கிட்டத்தட்ட இதுவரை 1 லட்சம் மக்கள் தாமாக சென்று மறைந்துள்ளனர். என்னடா இது? என்று யோசிக்கும் நேரத்தில் இந்தக் காரணத்தைப் பற்றி தெரிந்தால், ஷாக் ஆகிவிடுவீர்கள்.

ஜப்பான் வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த வளர்ச்சிக்காக சாதாரண மக்கள் முதல் பெரிய ஆட்கள் வரை அனைவருமே கடுமையாக உழைக்கிறார்கள். அப்படியென்றால் மன அழுத்தம் இல்லாமலா போய்விடும்.

 நாம் கடுமையாக உழைக்கும்போது அதிக மன அழுத்தம் அடைந்து, “என்னை யாரும் தேட வேண்டாம். என்று சொல்லி கண்காணாத இடத்திற்கு போய்விடலாம் போல இருக்கு.. " என்று ஒரு பேச்சுக்கு சொல்வோம் அல்லவா? அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது அந்த சேவை மையம்.

Yonige-ya (Fly by night people) என்றழைக்கப்படுகிறார்கள் அந்த மறையும் மக்கள். இரவோடு இரவாக அந்த சேவை மையம் உலகைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எண்ணும் மக்களை ஒரு வாகனத்தில் ஏற்றி எங்கயோ கொண்டு செல்கிறார்கள். அதன்பின்னர் அவர்களது அடையாளம் சுத்தமாக மறைந்துவிடுகிறது.

அதாவது, சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், கடன் தொல்லையால் சாகலாம் என்று நினைக்கும் மக்கள், சமூதாயத்தால் அவமானப்படுத்தப்படும் மக்கள் அனைவரும் இந்த சேவையை பெற்றுக்கொள்கிறார்கள். 2000 டாலர் முதல் 20,000 டாலர் வரை பணம் கொடுக்க வேண்டும் இந்த சேவைக்கு. எந்த அளவுக்கு ஆளமாக மறைய வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த அளவுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒரு Detective போல ஒருவரைப் பார்த்ததும் புரிந்துகொள்வது எப்படி தெரியுமா?
People Vanish

ஒரு முறை இந்த சேவையைப் பெற்றுவிட்டால், மறந்தும்கூட கடந்தக் காலத்தை திரும்பி பார்க்க இயலாது, உலக மக்கள் யாருடனுமே தொடர்பு செய்ய முயற்சிக்க கூடாது. அதேபோல் அடையாள அட்டை போன்ற அனைத்துமே அழிக்கப்பட்டுவிடும். அது ஒரு தனி உலகம், என்பதால், இந்த உலகத்தை முழுவதும் மறந்துவிட வேண்டும். ஆனால் அங்கு கடன்காரனும் வரமாட்டான், எவனும் வரமாட்டான்.

இந்த மாதிரி சேவை இங்க இருந்திருந்தால், நம்ம பசங்க எத்தனை முறை போயிருப்பாங்களோ?  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com