
தென் ஆப்பிரிக்காவில் உள்ள வறண்ட நிலத்தில் வசிக்கும் மக்கள், வெப்பம் தாங்க முடியாமல், நிலத்துக்கு அடியில் மண்ணைத் தோண்டி வழ்ந்து வருகிறார்கள்.
சுரங்கப் பாதைகள், ரகசிய அறைகள், நிலத்தடி அறைகள், பதுங்கு குழிகள் என பலவற்றைப் பற்றி வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். போர் சமயங்களிலோ, ஆபத்து தருணங்களிலோ மக்கள் நிலத்துக்கு அடியில் சென்று மறைந்துகொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது, அதுவும் இந்த விஞ்ஞான உலகில் தென்னாப்பிரிக்காவிலுள்ள ஒரு நகரமே நிலத்துக்கு அடியில்தான் வாழ்ந்து வருகிறது.
வட ஆப்பிரிக்காவில் துனிசியா என்ற இடத்தில் அரபு மொழி பேசும் 'பெர்பர்' என்ற இன மக்கள் வாழ்ந்து வரும் நகரம் உள்ளது. நீங்கள் 'ஸ்டார் வார்ஸ்' திரைப்பட ரசிகராக இருந்தார் 'லூக் ஸ்கைவாக்கர்' வீட்டின் இருப்பிடம் பற்றி தெரிந்திருக்கும். அந்த காட்சிகளெல்லாம் துனிசியாவிலுள்ள இந்த மட்மதா நகரில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டது.
பெரும்பாலும் விவசாயத் தொழிலையே நம்பி வாழும் பெர்பர் இன மக்கள், அரேபியாவிலிருந்து துனிசியா நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்து, மட்மதா நகரின் வெப்பம் தாங்க முடியாமல், நிலத்துக்கு அடியில் பள்ளம் தோண்டி வாழத் தொடங்கினர். இந்த இடத்தில் எளிமையான கருவிகளைக் கொண்டே தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையான மணற்பாறைகள் இருக்கும். அங்கே முதலில் வட்டமாக ஒரு குழியைத் தோண்டி, அதன் பக்கவாட்டில் அறைகள் போன்று உருவாக்கி, வீட்டின் அமைப்பைக் கொண்டு வருகின்றனர்.
இந்த தனித்துமான கட்டுமானத்தை Troglodyte என்று கூறுவார்கள். இந்த கட்டுமான முறை வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவி புரியும் என்கிறார்கள். ஆனால் இந்த கட்டுமானங்கள் 1960களில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்தது. இருப்பினும் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு இந்த வீடுகள் அனைத்தையும் நவீன வசதிக்கு மாற்றி, மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த வீட்டுக்கு தேவைப்படும் காற்றை வெளியேயிருந்து உள்ளே கொண்டு வருகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் தன் வேலையை செய்வதற்கும், சமூக ரீதியாக ஒன்றாக இணைவதற்கும் இது ஒரு மையமாக விளங்குகிறது.
என்னதான் பார்ப்பதற்கு பழைய கட்டுமான முறையாகத் தோன்றினாலும், அங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் எல்லா நவீன வசதி முறைகளும் இருக்கிறது. துனிசியா நாட்டின் ஜனாதிபதி 'ஹபீப் போர்குய்பா', நாட்டை நவீனமயமாக்கும்போது இந்த நகரமும் பல புதிய வசதிகளைப் பெற்றது.
என்னதான் உலகில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இங்குள்ள மக்கள் இன்றளவும் அந்த குகை வீட்டிலேயே தான் வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் அவர்களுடைய மரபு என்பதால், அதை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்கிறார்கள் மட்மதா நகர மக்கள்.