#JUST IN : சமூக நீதி நாள்.. முதலமைச்சர் விஜய் உறுதிமொழி ஏற்றார்..!

பெரியார் பிறந்தநாள்: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஏற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி!
cm vijay
cm vijay
Updated on

தந்தை பெரியாரை நினைவுக்கூரும் வகையில், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்கிறார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில்,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா இன்று (செப்.17) நடைபெற்றது. முன்னதாக, தலைமைச் செயலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் பிறந்தநாளையொட்டி சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, முதலமைச்சர் விஜய் உறுதிமொழி ஏற்றார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உறுதிமொழியை வாசிக்க, அமைச்சா்கள், அரசுத் துறைகளின் செயலாளா்கள், தலைமைச் செயலக ஊழியா்கள் உட்பட பலா் அதனை வழிமொழிந்து வாசித்தனர்.

உறுதிமொழி விவரம்: 'பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிா் என்ற பணி நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பாா்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதா்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்' என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com