யூட்யூபில் வீடியோ பார்த்து தன் மூளையில் சிப் பொருத்த முயன்ற நபர்.

யூட்யூபில் வீடியோ பார்த்து தன் மூளையில் சிப் பொருத்த முயன்ற நபர்.

மாஸ்கோவில் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த ஒருவர் செய்த செயலால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது தன் மண்டை ஓட்டை துளையிட்டு அதனுள்ளே சிப் பொறுத்த முயற்சித்திருக்கிறார் அந்த நபர். 

ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் ரதுகா' என்ற நபருக்கு தனது கனவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விபரீத ஆசை வந்துள்ளது. அதற்காக தனது மண்டை ஓட்டை துளையிட்டு அதன் உள்ளே சிப் பொருத்தலாம் என்ற யோசனை அவருக்கு வந்துள்ளது. அதற்காக தனது மண்டை ஓட்டை அவரே துளையிட முயன்றபோது சுயநினைவை இழந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகு அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் எடுத்த இந்த விபரீத முயற்சி குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

"இந்த யோசனை எனக்கு வந்ததும் யூடியூபில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எப்படி ஆபரேஷன் செய்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். பின்னர் ஒரு ட்ரில்லிங் மெஷினை வாங்கி தலையில் துளையிட்டு என் மூளையில் சிப் பொறுத்தினேன். கனவுகள் வரும்போது அதை சோதனை செய்வதற்கு இந்த எலக்ட்ரோடு சிப் பயன்படும். இந்த செயலால் எனக்கு பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் நான் செய்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது" என அவர் தெரிவித்தார். 

40 வயதான இந்த நபருக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் இப்படிப்பட்ட வினோத யோசனை வந்துள்ளது. ஓராண்டாக இதை எப்படி செயல்படுத்தலாம் என்ற தீவிர யோசனைக்குப் பிறகு, இத்தகைய விபரீத செயலை அவர் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தான் இந்த ஆய்வை தன்னை வைத்தே முயற்சிக்கலாம் என்று அவர் முடிவெடுத்துள்ளார். இதற்காக தொடக்கத்தில் மூளையில் சிப் பொருத்துவதற்காக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் செல்லலாம் என யோசித்தவர், இதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தனக்குத்தானே ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என நினைத்துள்ளார். 

சுமார் 4 மணி நேரம் இந்த ஆபரேஷனை அவருக்கு அவரே செய்துள்ளார். இதனால் 1 லிட்டருக்கும் அதிகமான ரத்தமிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மயக்கம் ஏற்பட்டதால் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com