இனி இவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது.! அதிரடி காட்டிய மத்திய அரசு.!

பெட்ரோல் பங்குகள்
Petrol Rules
Updated on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல் சீராக கிடைக்கும் வழகையில் தற்போது அது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

இதன்படி இனி தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சிலரை பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க அடுத்த 90 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், மொத்த விற்பனை பெட்ரோல் பங்குகளில் தான் இனி பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் பெட்ரோல் பங்குகளில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் டீசலுக்கு மேல் விற்பனை செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்குகளில் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பின் அனுமதிக்கப்பட்ட கொள்கலன்கள் அல்லது வாகனத்தின் டேங்குகளில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்படும்.

மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வேறுபாடு உள்ளது. குறிப்பாக சில்லறை பெட்ரோல் பங்குகளில் விலை குறைவாக இருப்பதால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சில்லறை விற்பனை பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கி செல்கின்றனர்.

வணிக நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதால், சில்லறை பங்குகளில் பொதுமக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பொதுமக்களின் எரிபொருள் தேவையை உறுதிப்படுத்தவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் வாங்கப்படும் பெட்ரோல், டீசலை பதுக்குதல் மற்றும் மறு விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் இந்த நேரத்தில், மத்திய அரசின் இந்த கடுமையான கட்டுப்பாடுகள் பெட்ரோல் தட்டுப்பாட்டைக் குறைக்க உதவும் எனக் கூறப்படுகிறது. மேலும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எரிபொருள் கிடைப்பதில் எவ்வித தட்டுப்பாடும் இருக்காது என மத்திய அரசு உறுதிப்படுத்த தெரிவித்துள்ளது.

பெட்ரோல் பங்குகள்
petrol diesel rulesimage credit-thestatesman.com
இதையும் படியுங்கள்:
தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம்..!! செல்வப்பெருந்தகைக்கு பதில் மாணிக்கம் தாகூர்?
பெட்ரோல் பங்குகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்புல்லா அமைப்பின் மீதான இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால் ஹார்மூஸ் ஜலசந்தியை முழுமையாக மூடியது ஈரான். மேலும் அமெரிக்கா - ஈரான் இடையே தாக்குதல் நடந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் ஐரோப்பாவில் அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரமப் தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெஎழுத்தாகும் பட்சத்தில், ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது நடந்தால் மட்டுமே உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு முடிவுக்கு வரும்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! அதிரடி உயர்வு.!
பெட்ரோல் பங்குகள்
logo
Kalki Online
kalkionline.com