கியூபாவைத் திணறடிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: கைகொடுக்கும் பழைய நண்பர் ரஷ்யா!

கியூபாவைத் திணறடிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: கைகொடுக்கும் பழைய நண்பர் ரஷ்யா!
Published on

த்தீன் அமெரிக்க நாடான கியூபாவில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிவருகையில், அதன் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா கைகொடுக்க முன்வந்துள்ளது.

உலக வரைபடத்தில் தனக்குக் கீழ் அருகில் இருக்கும் சிறு நாடான கியூபா மீது, அமெரிக்கா ஒரு கண்ணை வைத்தபடியே இருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளுக்கு நேர்மாறான பொதுவுடமை கொள்கைகளை கியூபா கடைப்பிடிக்கும் நிலையில், முப்பது ஆண்டுகளாக இரு தரப்புக்கும் இடையில் பிரச்னை நீடித்துவருகிறது. கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் அந்தச் சின்னஞ்சிறு நாடு பல்வேறு வகைகளில் பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், கொரோனாவுக்குப் பிறகு உலக நாடுகளில் நிலைமை சகஜ நிலைக்கு திரும்பினாலும், கியூபாவில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு அந்த நாட்டின் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் வாகனங்களுக்கான பெட்ரோல் கிடைக்காமல் கியூபாவாசிகள் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நாட்டின் முக்கிய வருமானமாக சுற்றுலாத் துறை இருந்துவருகிறது. கொரோனாவுக்குப் பிறகு நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளைச் செய்துதரவும் கியூப சுற்றுலாத் துறையினர் திணறுகின்றனர்.

Editor 1

இதற்கிடையே, இந்த ஆண்டு கோடையில் பல நாடுகளில் வறுத்தெடுத்த கடும் வெயிலின் தாக்கம் கியூபாவிலும் மிகவும் அதிகமாகவே இருந்தது. போதுமான தண்ணீர் கிடைக்காமல் தலைநகர் ஹவானாவில் நாட்டு மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவதிப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இப்போது பெட்ரோல் தட்டுப்பாட்டால் தலைநகர் ஹவானாவில் எரிபொருள் நிலையங்களில் கார்கள் வரிசையாகக் காத்துக்கிடக்கின்றன.

கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அங்கும் எரிபொருள் பிரச்னை உண்டானது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான அளவுக்குகூட, அந்த நாட்டுயிடம் அந்நியச்செலாவணி கையிருப்பு இல்லாமல் தீர்ந்துவிட்டது. இந்தியா முதலிய நாடுகளின் உதவியால் அப்போதைக்கு இலங்கை மூச்சு விட்டுக்கொண்டது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் ரேசன் கடைகளில் வழங்கப்படுவதைப் போல, டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

அதைப்போலவே, கியூபாவிலும் இப்போது வாகனங்களின் எண்களைக் குறிப்பிட்டு, டோக்கன் எண் கொடுத்து, அந்த வரிசைப்படி பெட்ரோல் வழங்கப்படுகிறது. ஆனாலும் அப்படி வரிசையில் வந்திருப்பவர்களுக்கும் எரிபொருள் வழங்கமுடியாத நிலைமை ஏற்பட்டது. இப்படியான சூழலில், கியூபாவின் கொள்கைக் கூட்டாளியான ரசியா நாடு இந்தப் பிரச்னையில் கைகொடுக்க முன்வந்துள்ளது.

முன்னதாக, கியூபாவின் இன்னொரு நட்பு நாடான வெனிசுலா, அன்றாடம் 80 ஆயிரம் பேரல் கச்சா பெட்ரோலியத்தை வழங்கிவந்தது. அந்த நாட்டில் சொந்தப் பயன்பாட்டுக்கே அதிகமான எரிபொருள் செலவானதால், 2020ஆம் ஆண்டில் கியூபாவுக்கு தந்துவந்த கச்சா பெட்ரோலியத்தில் 30 ஆயிரம் பேரல்களைக் குறைத்துக்கொண்டது.வெனிசுலாவிடமிருந்து 55 ஆயிரம் பேரல் கச்சா பெட்ரோலியமே கிடைப்பதால், கியூபா தன் தேவையை ஈடுசெய்ய முடியாமல் திணறுகிறது.

வெனிசுலா அளித்ததில் நின்றுபோன 30 ஆயிரம் பேரல் எரிபொருள் கிடைத்தால்கூட, கியூபா இப்போதைக்கு பெரும் இக்கட்டிலிருந்து மீண்டுவிட முடியும் என்கிறார்கள், இலத்தீன் அமெரிக்கப் பொருளியலாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com